ARTICLE AD BOX
தாயைக் கவனிக்க வந்த கேர் டேக்கருடன் உல்லாசமாக இருந்த நபரின் நிர்வாண வீடியோவைக் காட்டி மிரட்டி பணம் பறித்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் சூசையம்மாள் (35). இவர் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், இந்த நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் நளினி (32) என்பவர் பணிக்கு சேர்ந்துள்ளார்.
அதேநேரம், திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை பகுதியில் வசித்து வரும் மாதேஸ்வரன் (50) என்பவர், திருப்பத்தூர் தலைமை அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும்,இவரது தாய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், வேலைக்கு ஆள் கேட்டுள்ளார். இதன்படி, நளினி சில நாட்கள் மாதேஸ்வரனின் வீட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருங்கிப் பழகி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்படி ஒருநாள் மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும்போது, நளினி அதனை வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த மாதேஸ்வரன் 2.5 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார். ஆனால், கூடுதல் பணம் கேட்டு தொல்லை தொடர்ந்ததால், செல்போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளார் மாதேஸ்வரன்.
இதையும் படிங்க: தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
இதனால் ஆம்பூர் பகுதியில் வசித்து வரும் விமல்ராஜ் (40) என்பவரை மாதேஸ்வரனின் வீட்டுக்கு அனுப்பி மிரட்டியுள்ளார் நளினி. எனவே, மாதேஸ்வரன் இது குறித்து திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், சூசையம்மாள், நளினி மற்றும் விமல்ராஜ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 months ago
89









English (US) ·