தாலியைப் பறித்த பெற்றோர்.. பெண் பரிதாப பலி.. என்ன நடந்தது?

3 hours ago 3
ARTICLE AD BOX

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர்கள் கணேசன் – தமிழ்ப்பிரியா தமப்தி. இவர்களது மகள் பூஜா (21), பள்ளிப்படிப்பை கும்மிடிப்பூண்டியில் முடித்துவிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கஸ்தம்பாடியில் உள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பு முகாமில் வசிக்கும் தனது பெரியம்மா தமிழ்ச்செல்வியின் வீட்டில் தங்கி, ஆரணியில் உள்ள நர்சிங் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படித்து வந்துள்ளார்.

பின்னர், டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு நகைக்கடை ஒன்றிலும் வேலை செய்து வந்த பூஜாவுக்கு, கஸ்தம்பாடி முகாமைச் சேர்ந்த சரண்ராஜ் (19) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெயிண்டர் வேலை செய்து வந்த சரண்ராஜ், தன்னைவிட இரண்டு வயது இளையவர் எனத் தெரிந்தும், பூஜா தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்னர், இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது ஒருகட்டத்தில் பூஜாவின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் ஆரணிக்கு வந்து மகளைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி முகாமிற்கே அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், சரண்ராஜை பிரிந்து செல்ல மனமில்லாத பூஜா, பெற்றோரிடம் பிடிவாதம் காட்டியுள்ளார்.

Arani Murder

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பூஜாவை அடித்து மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 6ஆம் தேதி முகாம் குடியிருப்பில் இருந்து வெளியேறிய பூஜா, சரண்ராஜை வரவழைத்து ஊட்டி குன்னூருக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

எனவே, பூஜாவைக் காணவில்லை என பெற்றோரும் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனிடையே, கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட சரண்ராஜ் – பூஜா, கடந்த 10ஆம் தேதி ஆரணி அருகேயுள்ள சரண்ராஜின் முகாம் குடியிருப்புக்கு திரும்பியுள்ளனர்.

ஆனால், பிரச்னைக்குரிய சூழ்நிலையைப் புரிந்து கொண்ட இருவரும், பாதுகாப்பு கேட்பதற்காக ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளனர். இதனை அறிந்த பூஜாவின் பெற்றோரும், உறவினர்களும் காவல் நிலையத்துக்கு அருகேயுள்ள கோயில் முன்பு காத்திருந்துள்ளனர்.

அப்போது, ஜோடியாக காரில் வந்த இருவரையும் மடக்கி வெளியே இழுத்துபோட்டு, சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், பூஜாவின் கழுத்தில் இருந்த தாலியை அவரின் தாய் தமிழ்ப்பிரியாவே அறுத்து கீழே எறிந்துள்ளார். இதனையடுத்து, பூஜாவை மட்டும் காரில் ஏற்றிக்கொண்டு, ஆரணி முகாம் வாழ் குடியிருப்பில் உள்ள பெரியம்மாள் வீட்டுக்கே பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, அடுத்த இரண்டு நாள்களும் வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், துக்கம் தாளாமல் கடந்த மார்ச் 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக அவரத் பெற்றோர் கூறுகின்றனர். இவ்வாறு பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பூஜா, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோவையில் பிரபல தொழிலதிபரின் 10 வயது மகன் கடத்தல்… பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுநர்.!!

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், மார்ச் 14ஆம் தேதியான நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பூஜாவின் உடல் அவரின் பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்டது.

இறுதிச் சடங்கிற்காக கும்மிடிப்பூண்டியில் உள்ள தங்களின் முகாம் குடியிருப்புக்கே மகளின் உடலை பெற்றோர் கொண்டு சென்றனர். இதனிடையே, உயிரிழப்புக்கு முன்பு பூஜாவையும், அவரின் காதல் கணவரையும் பெற்றோரும் உறவினர்களும் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சிகளும், பூஜாவின் கழுத்தில் இருந்த தாலியை அவரின் தாய் பறித்து வீசும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

  • Azhagi movie young Parthiban actor Satheesh அட இவரா.!அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்தவரின் தற்போதைய நிலைமையை பாருங்க.!
  • Continue Reading

    Read Entire Article