ARTICLE AD BOX
லெஜண்ட் பட நடிகை
லெஜண்ட் சரவணன் நடித்த “தி லெஜண்ட்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் ஊர்வசி ரவுதெலா. இவர் ஹிந்தி, தெலுங்கு திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். இந்த நிலையில் இவரது சூட்கேஸ் திருட்டுப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊர்வசி ரவுதெலா லண்டனில் விம்பிள்டன் போட்டியை பார்க்கச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

எப்படி தொலைந்தது?
அதாவது லண்டனில் விம்பிள்டன் போட்டியை பார்க்கச் சென்ற நிலையில் லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் அவரது Christian Dior சூட்கேஸ் காணாமல் போயுள்ளது. விமான நிலையத்தில் லக்கேஜ் பெல்ட்டில் இருந்து அவரது சூட்கேஸ் திருட்டுப்போயுள்ளதாக ஊர்வசி ரதெவுலா தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அந்த சூட்கேஸிற்குள் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து எமிரேட்ஸ் நிறுவனம் மற்றும் கேட்விக் விமான நிலைய அதிகாரிகளின் உதவியை நாடியபோது அவர்களிடம் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஊர்வசி ரவுதெலா. மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் “பொறுத்துக்கொள்ளப்படும் அநீதி மீண்டும் மீண்டும் நிகழும் அநீதிக்கு ஒப்பாகும்” எனவும் குறிப்பிட்டுள்ளார். ஊர்வசி ரவுதெலாவின் சூட்கேஸ் திருடப்பட்ட சம்பவத்தை குறித்து லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
