திடீரென ஒரு ஆடு.. திருமாவை காலி செய்யும் திமுக.. ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!

1 month ago 44
ARTICLE AD BOX

வைகோவைப் போல் திருமாவளவனையும் திமுகவினர் காலி செய்கிறார்கள் என தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று, சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர், “இந்த அரங்கத்தின் பெயர் ராமச்சந்திரா. 1972ல் எந்த தீய சக்தியை எதிர்த்து, ஊழலை எதிர்த்து, குடும்ப ஆட்சியை எதிர்த்து எம்ஜிஆர் ஆரம்பித்தாரோ, அவருடைய பெயரில் இருந்து நம்முடைய முதல் பொதுக்குழு உதயமாகியிருக்கிறது.

எங்களுடைய அரசியல் Work From Home அல்ல, உங்களுக்கெல்லாம் ரிட்டையர்மென்ட் கொடுக்கத்தான் ரெடியாகி கொண்டிருக்கிறோம். உங்களுடைய 70 வருட அரசியல், உங்களுடைய ஓட்டு மொத்த மன்னராட்சி, குடும்ப ஆட்சி, 40 வருட வேட்பாளர், இந்த அமைச்சர் பெரிய ஆளு, இந்த அமைச்சருக்கு நிறைய செல்வாக்கு, அந்த அமைச்சர் நிறைய காசு வச்சிருக்கார் என இந்த ஊழல் அரசையும், அமைச்சர்களையும், இந்த ஊழல் குடும்பத்தையும் தூக்கி எறிவதற்கு கட்சியின் உள்கட்டமைப்பை பொறுமையாக உருவாக்கி கொண்டிருக்கிறார்.

கூடிய விரைவில் அதனை பொதுச் செயலாளர் அறிவிப்பார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பாலியல் பிரச்னை உருவானது. இங்கிருக்கும் ஆளும் கட்சி அதை மூடி மறைக்க பார்த்தார்கள். விஜய் அறிக்கை வந்த பிறகுதான் தமிழகம் முழுவதும் எங்கே சார்? என்ற குரல்கள் எழுந்தது.

Aadhav Arjuna

பிரசாந்த் கிஷோரை நாம் அழைத்து வந்த உடனே, திமுக நமக்கு எதிராக ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கினார்கள். பீகார், இந்தி என்ற கட்டமைப்பை உருவாக்கினார்கள். இப்போது திமுக என்ன செய்கிறார்கள் என்றால், ‘பென்’ என்ற ஒரு பெரிய நிறுவனம் இருக்கிறது.

தன்னுடைய மருமகனை வைத்து அதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதோடு சேர்ந்து ஐபேக் என்ற நிறுவனத்துடன் சைன் போட்டு உள்ளனர். பொய் பிரச்சாரத்திற்கு செட் செய்யப்பட்டவர்தான் தமிழக பாஜக தலைவர். திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் எங்கள் தலைவரைப் பார்த்து, அவரது தொழிலை வைத்து பேசுகிறார்.

பெண்ணைப் பற்றி தரக்குறைவாக பேசும் ஒருவரை தலைவராக வைத்திருக்கும்போதே முடிவாகிவிட்டது பாஜக எந்த அளவிற்கு இருக்கிறது என்று. தமிழிசை, வானதி அக்கா அனைவருக்கும் தெரியும், அந்த தலைவரைப் பற்றி. திமுகவிற்கு எதிராக அண்ணா பல்கலை பிரச்னைக்கு மக்கள் எல்லாம் குரல் கொடுக்கும்போது, திடீரென ஒருவர் சட்டையைக் கழட்டி சாட்டையால் அடித்துக் கொள்கிறார்.

என்னடா அரசியல் பண்றீங்க? யாருக்காக இந்த அரசியல்? பாவம் மோடி, டெல்லியில் உட்கார்ந்து கொண்டு நமக்காக ஒரு பையன் சாட்டையில் அடித்துக் கொள்கிறான், நமக்காக கத்திக் கொண்டிருக்கிறான், வேலை செய்து கொண்டிருக்கிறான் என நினைக்கும்போது வியூக வகுப்பாளர்கள் பாஜக தலைவரையே கரெக்ட் செய்துவிட்டார்கள்.

இதையும் படிங்க: TVK Vs DMK தான்.. மாண்புமிகு ஸ்டாலின், மோடி ஜி அவர்களே.. விஜய் அட்டாக் பேச்சு!

இனி வரும் காலங்களில் எங்கள் தலைவரையும், கட்சியையும் தொட்டால் உங்கள் உண்மையைத் தூக்கி எறிவோம். திமுக சின்னத்தைக் கொடுத்து மதிமுகவை காலி செய்துவிட்டது. மதிமுகவைக் காலி செய்தது போல் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் காலி செய்யப் பார்க்கிறது.

விசிக தலைவர் திருமாவளவனின் உழைப்பை திமுக இழிவுபடுத்துகிறது. அவரை உடன் வைத்துக்கொண்டு விசிகவை காலி செய்யும் வேலையை திமுக செய்கிறது. வைகோவைப் போல் திருமாவளவனையும் காலி செய்கிறார்கள். விசிக அமைதியானதால், பட்டியலிலின மக்களுக்காக தவெக குரல் கொடுக்கிறது” எனக் கூறினார்.

  • Manoj Bharathiraja Death யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!
  • Continue Reading

    Read Entire Article