திடீரென கொதித்த விஜய்.. நாகையில் நடந்தது இதுதான்!

6 days ago 13
ARTICLE AD BOX

நாகையில், திமுக நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் கைது செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், கீழையூர் அருகே உள்ள கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என, கடந்த மார்ச் 5ஆம் தேதி, தவெக சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

ஆனால், தவெக சாா்பில் அளிக்கப்பட்ட மனுவைக் கண்டித்து திமுகவினர் தகராறு செய்துள்ளனர். அதாவது, ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்ததும், திமுகவினரைச் சேர்ந்த சிலர் தகராறு செய்ததோடு அவர்களைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தத் தாக்குதலில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்கள் உள்பட நான்கு பேரும் காயம் அடைந்தனர்.

பின்னர் தகவலறிந்து வந்த கீழையூர் போலீசார், காயமடைந்த நால்வரையும் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, இதனை அறிந்த நாகை மாவட்ட தவெக செயலாளர் மா.சுகுமாரன் தலைமையிலான கட்சியினர் கீழையூர் ஸ்டேஷனில் குவிந்தனர்.

TVK Vijay

அப்போது, ஏற்கனவே இலவச பட்டா வழங்காதது குறித்து புகாா் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை, இப்போது புகார் அளிக்க வந்தவர்களை தாக்கிய திமுகவினர் மீது உரிய நடவடிக்கை இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தவெகவினர் கூறியுள்ளனர்.

இதன்படி, இன்று நாகையில் இலவச வீடு மனை பட்டா விட்டு போன நபர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக பொறுப்பாளர் ரவிச்சந்திரனை கைது செய்யக் கோரி மேலப்பிடாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சில மணி நேர்த்தில் பெண்களை தாக்கிய திமுக ஒன்றிய செயலாளரை‌ கைது செய்ய வலியுறுத்தியும், தமிழக பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போராட்டம் செய்த நாகை மாவட்ட தவெக மாவட்டச் செயலாளர் சுகுமார் மற்றும் தவெக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்கள் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலிக்கு உண்டான கள்ளக்காதல்.. கள்ளக்காதலன் செய்த காரியம்.. நாமக்கல்லில் பரபரப்பு!

தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Gayathri Reddy controversy டேய் யாருடா நீங்களா..நான் ‘ரோஹித் ஷர்மாவின்’ காதலியா..கடுப்பான விஜய் பட நடிகை.!
  • Continue Reading

    Read Entire Article