ARTICLE AD BOX
சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் அமைந்துள்ளது மாரியம்மாள் பட்டாசு ஆலை. இந்த ஆலையில் இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சமயத்தில் இரசாயன பொருட்கள் உரசல் காரணமாக திடீரென ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த அறையில் 6 தொழிலாளர்கள் சிக்கியிருந்ததாகவும் அதில் மூன்று பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவருகிறது. காயமடைந்தவர்கள் தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு கடந்த ஜூலை 1 ஆம் தேதி சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றுமொரு பட்டாசு ஆலை வெடித்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
