திமுக எம்எல்ஏ சொன்னதுலாம் வேணாம்.. திமுககாரங்க சொல்றத கேளுங்க.. பிடிஓ அலுவலகத்தில் ரகளை!

11 months ago 121
ARTICLE AD BOX

கள்ளக்குறிச்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளைத் தேர்வு செய்வதில், திமுக எம்எல்ஏ மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில், கலைஞர் கனவு இல்​லத் திட்​டத்​தின் கீழ் 3,300 வீடு​களைக் கட்ட திட்​ட​மிடப்​பட்​டுள்ளது. இதற்​கான பயனாளி​களை, அந்​தந்த வட்டார வளர்ச்சி அலு​வலர்​கள் தேர்​வு செய்து, அதற்கான பணி ஆணை​களை வழங்கி வந்​தனர்.

அந்த வகையில், திரு​நாவலூர் ஊராட்சி ஒன்​றி​யத்​தில் 458 வீடு​கள் ஒதுக்​கீடு செய்யப்பட்டது. எனவே, இதற்​கான பயனாளி​களை அரசு அறி​வித்​துள்ள விதி​களின் படி தேர்வு செய்ய வேண்​டும் என உளுந்​தூர்​பேட்டை எம்​எல்​ஏவான மணிக்​கண்​ணன், வட்டார வளர்ச்சி அலு​வலரை (பிடிஓ) அறி​வுறுத்தி உள்ளா​ர்.

ஆனால், திமுக ஒன்​றியச் செய​லா​ளர்​களான வசந்​தவேல் மற்றும் முரு​க​ன் ஆகியோர், தாங்கள் சொல்​லும் நபர்​களுக்கே வீடு​களை ஒதுக்க வேண்​டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் குழப்பமடைந்த பிடிஓ உமாராணி, எம்​எல்ஏ சொன்னபடியே கடந்த மார்ச் 4அம் தேதி ஊராட்​சித் தலை​வர்​களை அழைத்து பயனாளிகளைத் தேர்வு செய்ய வலி​யுறுத்​தி​யிருக்​கி​றார்.

DMK

இதனை அறிந்த முரு​கன் மற்​றும் வசந்​தவேல் ஆதர​வாளர்​கள், திமுக கொடிகளோடு வந்து பிடிஓ அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு, நாற்​காலிகளை தூக்கி வீசி ரகளை செய்துள்ளனர். இதனால், தன்னை வேறு எங்​காவது பணிமாற்றம் செய்யும்படி பிடிஓ கோரி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: ஆணுறுப்பு அறுபட்ட நிலையில் கிடந்த நபர்.. திருநங்கையாகும் ஆசையில் மரணம்.. என்ன நடந்தது?

இந்த நிலையில், இது குறித்து திரு​நாவலூர் ஒன்​றியச் செய​லா​ளர் வசந்​தவேல் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “அதி​முக ஆட்​சி​யில் பசுமை வீடு​கள் திட்​டத்​தில் அதிமுகவினருக்கே ​வீடு​களை ஒதுக்​கி​னார்​கள் என்​பது ஊரறிந்த ரகசி​யம். அப்​படி இருக்​கை​யில், ஊராட்சி மன்​றத் தலை​வர் சொல்​றவ​ருக்​குத்தான் வீடு​களை ஒதுக்குவோம்னு கங்​கணம் கட்​டிக்​கிட்டு வேலை செய்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

அதேநேரம், இது தொடர்பாக எம்​எல்​ஏ மணிக்கண்​ணன் கூறுகையில், “முதல்மைச்சரின் கனவுத் திட்​டம் இது. அரசு என்ன விதி​களைச் சொல்லி உள்ளதோ, அதன்​படிதான் பயனாளி​கள் பட்​டியலை பிடிஓ தயார் செய்துள்ளார்கள். ஆனால், அவர்களை இப்​படிச் செய்​ய​லா​மா? ​இருப்பினும், ​கட்​சிக்​காரர்களை​யும் விட்​டு​விடாதீர்கள் என்று சொல்​லி​உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Vaadivaasal Movie Latest News களைகட்டிய ‘வாடிவாசல்’..ஜி வி வெளியிட்ட பதிவு..சூர்யா ரசிகர்கள் ஹாப்பி.!
  • Continue Reading

    Read Entire Article