ARTICLE AD BOX
சென்னை பெரம்பூர் பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திருச்சி சிவா எம்பி பேசுகையில், காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டன கூட்டங்களை நடத்தினார்.
ஆனால் காமராஜருக்கு ஏசி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதியை செய்ய உத்தரவிட்டார்.
கருணாநிதியின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன் அப்போதைய முதல்வரான கருணாநிதியின் கைகளை பிடித்து கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார்.
திருச்சி சிவாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுக்குறித்து நாட்டு விடுதலை போரில் பல ஆண்டுகள் சிறையேறி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராஜர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான்.
கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்…இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் வேண்டிக் கொள்வதாக திருச்சி எம்.பி. திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் திருச்சி மேஜர் சரவணன் சிலை அருகே இருந்து தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள் 50க்கு மேற்பட்டோர் பேரணியாக சென்று திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால், திடீரென சாலை அமர்ந்து திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் திருச்சி சிவா உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும், இல்லையென்றால் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். மேலும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
