ARTICLE AD BOX
முதல்வர் முக ஸ்டாலின் கடந்த மாதம் தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வார காலம் சிகிச்சை முடிவடைந்த பிறகு கடந்த மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் அவரது உடல்நலத்தை குறித்து நலம் விசாரிக்கும் விதமாக பிரேமலதா, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வைகோ, முதல்வர் முக ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். முதல்வரை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். கவின் கொலையில் அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். ஆணவ கொலைக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினேன்” என கூறினார்.

மேலும் பேசிய அவர், “திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறிவிடும் என தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர். தேமுதிக உள்ளே வந்தால் மதிமுக வெளியே போய்விடும் என எழுதுகிறார்கள்” எனவும் அவர் பேசியுள்ளார். “ஓ பன்னீர் செல்வம் முதல்வரை சந்தித்ததில் அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக தெரியவில்லை” எனவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
