திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடமில்லை.. சொல்கிறார் காங்கிரஸ் எம்பி..!!

3 hours ago 4
ARTICLE AD BOX

விருதுநகர் அருகே உள்ள சின்ன தாதம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் மற்றும் காங்கிரஸ் மற்றும் திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை இந்தியாவில் இதுவரை யாரும் செயல் படுத்த வில்லை என தெரிவித்த மாணிக்கம் தாகூர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மகளிருக்கு வழங்கப்படும் 1000 ரூபாயை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படியுங்க: விஜய் சொன்னது போல் நடந்தால் நான் மனதார வரவேற்பேன் ; திருப்பம் வைத்த திருமாவளவன்!

மேலும் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தமிழகத்தில் திமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது என த.வெ.க தலைவர் விஜய் அறிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தவெக மற்றும் பாஜக கட்சிக்கும் என இரு கட்சிகளுக்கு இடையிலான பஞ்சாயத்து என்றார்

மேலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பது விஜய் அறிவித்திருப்பது மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு சொன்ன பதிலாக தான் பார்க்கிறோம் எனவும் த.வெ.க இந்த முடிவை எவ்வளவு நாளைக்கு எடுத்துச் செல்கிறார்கள் என்று பார்ப்போம் என்றார்.

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்த த.வெ.க தலைவர் விஜயை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணிக்கு அழைத்திருப்பது என்பது பாஜகவின் பரிதாப நிலை புரிகிறது என்றார்.

பாஜக உடன் விஜய் கூட்டணி கிடையாது என அறிவித்த பிறகு பாஜக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்டவைகளை த.வெ.கவினர் மீது ரெய்டு நடைபெறுமா அல்லது நடைபெறாதா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் எனவும் அவ்வாறு அமலாக்கத்துறை சோதனையை எதிர்கொள்ள த.வெ.கவினர் தயாராக இருக்கிறார்களா எனவும் அந்த சோதனைகளை எல்லாம் தாங்கிக் கொள்ளும் சக்தி த வெ.கவினர் இடையே உள்ளதா என மாணிக்கம் தாகூர் எம்பி கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் எம்பி நாடு முழுவதும் விவசாயி களின் தற்கொலைகள் அதிக அளவில் தொடர்வதாகவும் அந்த விவகாரம் குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் குரல் எழுப்புவோம் என்றார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக மற்றும் த.வெ.க கூட்டணிக்கும் இடையான தேர்தலாக தான் இருக்கும் என்றார்.

மேலும் பாஜக அதிமுகவுடன் இருப்பதால் மக்கள் பாஜகவிற்கு எதிர்பான மன நிலையில் இருப்பதால் தமிழகத்தில் என்றுமே பாஜகவுடன் சேர்ந்த அதிமுக வெற்றி பெறப்போவதில்லை என்றார்.

மேலும் இந்த முறை மக்கள் தெளிவான தீர்ப்பு வழங்குவார்கள் எனவும் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக வருவார் எனவும் வரும் தேர்தலோடு அதிமுக கூட்டணி காலியாக போய் விடும் என்றார்.

மேலும் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தமிழகத்தில் இந்தியா கூட்டணி பலமாக உள்ளதாகவும் இந்திய கூட்டணிக்கு பாமக வரணுமா வேண்டாமா என்பது ஆருடம் சொல்வது தப்பாக போய் விடும் என்றார்.

மேலும் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக முக்கியமான பங்கு வகிப்பதாகவும் திருமாவளவன் மிக நம்பிக்கைக்கு உரியவராக ஆக இருக்கிறார் என்றார். மேலும் இந்தியா கூட்டணி என்பது சித்தாந்த அடிப்படையிலும் உறவு அடிப்படையிலுமான கூட்டணி என்றார்.

பாஜகவோடு உறவோடு இருப்பவர் கள் யாராக இருந்தாலும் சரி மோடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி திமுக கூட்டணி இடம் இல்லை என பாமாவிற்கு திமுக கூட்டம் இடமில்லை என்பதை சூசகமாக மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்தார்.

  • blue sattai maran crticize 3bhk movie as casagrand advertisement அப்போ இது Casagrand விளம்பரமா? படம் இல்லையா? -3BHK படத்தை கண்டபடி விமர்சித்த பிரபலம்!
  • Continue Reading

    Read Entire Article