ARTICLE AD BOX
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பண்டாரஞ்செட்டிவிளை பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மகன் சக்திவேல் (27) என்பவர் தமிழக வெற்றி கழகத்தின் சாத்தான்குளம் ஒன்றிய முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்தார்.
தற்போது அக்கட்சியில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் அவரது உடன் பிறந்த சகோதரி மற்றும் அவரது கணவர் கடந்த இரு ஆண்டுகளாக பிரிந்து வாழும் நிலையில் இன்று காலை அவரது சகோதரியை பிரிந்து வாழும் அவரது கணவர் சாலையில் வைத்து தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: 9 மாத திருமண வாழ்க்கைக்கு விடை என்ன? கணவர் அதிர்ச்சி பதில்!
இது குறித்து சக்திவேல் தட்டி கேட்ட போது அவரையும் அவரது சகோதரியின் கணவர் தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாரிடம் ஏற்கனவே புகார் அளித்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் திமுக பிரமுகர் ஒருவர் தலையீடு செய்வதாகவும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து எனவும் கூறி தவெக பிரமுகரான சக்திவேல் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியாகி சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் இளைஞர் அணி செயலாளர் தனது உயிருக்கு திமுக பிரமுகரால் ஆபத்து என வீடியோ வெளியிட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தனது உயிருக்கு ஆபத்து என வீடியோ வெளியிட்ட நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சாத்தான்குளம் சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Crime, dmk, dmk executive, Politics, thoothukudi, TVK Executive, அரசியல், குற்றம், தவெக நிர்வாகி, திமுக, தூத்துக்குடி