ARTICLE AD BOX
புதுக்கோட்டையில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று நடைபெற்ற நிகழ்வில் “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“ என்ற புதிய பிரசார திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ், கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளின் உண்மை நிலையை மக்களுக்கு அறிவிக்கும் ரிப்போர்ட் கார்டு வெளியிடப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக பகிரப்பட உள்ளது.
நிகழ்ச்சியின்போது, “பதில் சொல்லுங்க அப்பா“ என்ற தலைப்பில் பெண்களின் பாதிப்புகளை விளக்கும் காணொலியையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று உறுதியளித்தார்.திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை இல்லை என குற்றம்சாட்டிய அவர், நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல என்று விமர்சித்தார்.
மேலும், பிரதமரின் வீட்டுக்கதவை அதிமுக தட்டுவதாக எழும் விமர்சனத்திற்கு பதிலளிக்கையில், திமுகவினர் சென்று தட்டினால் மட்டும் சரியா என கேள்வி எழுப்பினார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, புதிய அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறார்.
திமுக தனது வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றியதாக கூறும் நிலையில், இந்த ரிப்போர்ட் கார்டு அதிமுகவுக்கு எவ்வளவு பலம் சேர்க்கும் கூடிய விரைவில் தெரியவரும்.
