திமுகவில் 2 விக்கெட் காலி.. இன்னும் பல தலைகள் உருளும்.. பார்த்து ரசிக்கலாம் : ஹெச் ராஜா பகீர்!

1 week ago 15
ARTICLE AD BOX

இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பாஜகவை சேர்ந்த மதுரை நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய எச்.ராஜா கூறுகையில், காஷ்மீர் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் உலக ஊடகம் மூலம் ஒப்புதல் வாக்குதல் அளித்துள்ளார். உள்நாட்டிலே அரசியலுக்க எதிராக போராடும் திருமாவளவன், சீமான், சித்தா ராமையா, கம்யூனிஸ்ட் கட்சிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. நாட்டு மக்கள் மீது இவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

இஸ்ரேலுக்கு எதிராக மாஸ் பயங்கரவாதிகள் உலகளவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தலைமையேற்று நடத்துபவர்கள் அமாஸ், லஸ்கரிதைபா, ஜெய்ஸ்ரீமுகமது ஆகிய அமைப்புகள் தான் இவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானில் இருந்து தான் செயல்படுகிறார்கள்.

அமெரிக்காவில் இருப்பவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் தான்., அவர்கள் யாரும் அமெரிக்காவை தாக்கி பேசுவதில்லை ஆனால் இந்தியாவில் இந்தியாவிற்கு எதிராக ஏராளமான பேசி வருகிறார்கள்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதை நிறுத்த வேண்டும் இவர்களால் நாட்டுக்கு எதிராக பாதிப்பு வராது என்பதை உறுதிப்படுத்த முடியுமா.?

ஆடையை விலக்கி துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கு மதவெறி கொண்ட கும்பல்களின் செயல் திருமாவளவன் கண்ணிற்கு தெரியாதா.?

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்படி கேட்க முடியும் என்ற அளவிற்கு காஷ்மீர் முதல்வர் கேள்வி எழுப்பி வருகிறார்.!

வலதுசாரிகள்., இடதுசாரிகள்., கம்யூனிஸ்டுகள் என சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் தேச விரோத சக்திகளாக விளங்குகிறவர்கள் இந்தியாவிற்கு ஆதரவாக ஒரே நேர்கோட்டில் நில்லுங்கள்.

பகல்ஹாம் தீவிரவாத தாக்குதல் குறித்து பாஜகவை விமர்சித்துள்ளார் என்பது குறித்த கேள்விக்கு.? பாரதத்திற்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக குரல் கொடுப்பவர்கள் சமூகவிரோதிகள் என்று குறிப்பிட்டார் இதுதான் என் கருத்து என்றார்.

பாஜக அரசு குறித்து பா.சிதம்பரம் விமர்சித்து பேசியது குறித்த கேள்விக்கு.?
காங்கிரஸ் ஆட்சியில் அரசியல் சட்டத்தை நாசம் செய்த போது நவ துவாரத்தையும் மூடி கொண்டிருந்த பா.சிதம்பரம் வாய் பேசலாமா.? பாஜக மட்டும் தான் சட்டத்தை மதித்து நடக்கின்ற கட்சி சிதம்பரம் போன்றவர்கள்., அரசியல் சட்டத்தை இந்திரா காந்தி சிதைத்த போது உடன் இருந்தவர் இந்த பா.சிதம்பரம் என கூறினார்.

திமுகவில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்திருக்கிறது. இதுபோன்ற தீர்ப்புகளால் திமுகவில் இன்னும் பல தலைகள் உருளும் அதனை பார்த்து ரசிப்போம். நீதிமன்ற தீர்ப்பால் முதல்வர் உளறிக் கொண்டிருக்கிறார்., திராவிட அரசியலே மத வெறி தான்., வெறுப்பு அரசரின் மூலதனமாக இருப்பதை திராவிட இயக்கங்கள் தான். முதல்வர் வாயைக் குறைத்துக் கொள்வது நல்லது. முதல்வர் உங்கள் உடலை பேணுவதற்கு வாயை குறைத்துக் கொள்வது நல்லது.

நீட் தேர்வு கொண்டுவந்த விவகாரம் குறித்து அஞ்சு கட்சி அம்மாவாசைக்கு என்ன தெரியும்.! அவர் செல்வப் பெருந்தகையா.? அல்லது பெருந்தொகையா.? என எச்.ராஜா விலாசல்.

  • manimegalai shared about quit the anchoring job பிடிச்ச வேலையை என் வாயாலயே வேண்டாம்னு சொன்னேன்- மேடையில் கலங்கிய மணிமேகலை 
  • Continue Reading

    Read Entire Article