ARTICLE AD BOX
அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை முடக்கி விட்டுள்ளன.
இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுவது, இந்த தேர்தல் நிச்சய்ம வித்தியாசமான தேர்தலாக அமையும் என்றும், தற்போது இருக்கும் இரண்டு கூட்ணிகளில் மாற்றம் நடக்கலாம் என கூறியுள்ளனர்.
இதையும் படியுங்க: துரை தயாநிதி வழக்கில் கோர்ட் செக்? அமலாக்கத்துறைக்கு பச்சைக்கொடி!
திமுக கூட்டணியில் உள்ள கட்சிக் நிச்சயம் வலுவாக உள்ளதாகவும், அந்த கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேற வாய்ப்பில்லை என கூறப்பட்டு வருகிறது.
அதிமுகவும் தங்களுககு எதிரி என கூறிய பாஜகவுடன் கைக்கோர்த்துள்ளது. ஆனால் திமுக கூட்டணி இது தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு நாங்கள்தான் மீண்டும் வெற்றி பெறுவோம் என கூறி வருகின்றனர்.
 ஆனால் திமுகவில் உள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு எட்டவில்லை என்றால் நிச்சயம் வெளியேறி விடும் என கூறப்படுகிறது. அதே போல அதிருப்தியில் உள்ள வைகோவும் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிகவும், பாமகவும் தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்த நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியும் அந்த கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
தவெக, தேமுதிக, பாமக, மதிமுக, காங்கிரஸ் இணைந்தால் நிச்சயம் வெற்றி தான் என கூறப்படுகிறது. இது திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளை முறியடிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
 Tags: congress, dmdk, dmk, mdmk, PMK, Politics, TVK, அரசியல், தமிழக காங்கிரஸ், தவெக, திமுக, தேமுதிக, பாமக, மதிமுக

                        4 months ago
                                44
                    








                        English (US)  ·