திமுகவுக்கு உள்ள பெண்கள் ஆதரவை குறைக்க விஜய் முயற்சி… அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

1 month ago 23
ARTICLE AD BOX

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, மாநில சீர்திருத்த நிர்வாக பயிற்சி நிறுவனத்தின் 74 வது அணி சிறை காவலர்கள் பயிற்சி நிறைவு விழா திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நீதிமன்றங்கள் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊழல் தடுப்புச் சட்டம், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் மகேஸ்வர் தயாள் மற்றும் திருச்சி, மதுரை, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜிக்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி : சிறையில் உள்ள சிறைவாசிகள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகின்றன. சிறை உணவை விரும்பி உண்ணும் வகையில் அவர்களுக்கான உணவு வழங்கப்படுகிறது.

சிறைவாசிகளின் உறவினர்கள் அவர்களை சந்திக்க வந்தால் தொலைபேசி மூலமாக பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளோம் அதேபோல வீடியோ காலில் பேசுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். காவலர்கள் உடலில் அணியும் கேமரா சிறை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பல்வேறு நவீன வசதிகள் சிறை துறையில் செய்யப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஐந்து மாதங்களில் தண்டனை பெற்று கொடுத்துள்ளோம். அதை செய்தது தமிழக காவல்துறை தான். பொள்ளாச்சி வழக்கில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யவே காலதாமதப்படுத்தினார்கள். ஆனால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் புகார் கொடுத்தவுடனேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன் பின் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த குழுவில் இருந்த அதிகாரிகள் அனைவரும் தமிழக காவல்துறையை சேர்ந்தவர்கள் தான். ஐந்து மாதங்களில் இந்த விவகாரத்தில் தீர்வு கிடைத்துள்ளது. இதிலிருந்து இந்த அரசு பெண்கள் மீது அக்கறை கொண்ட அரசாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

திமுக அரசு மீது பெண்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதை அறிந்தவர்கள் ஏதாவது ஒன்றைக் கூறி அந்த ஆதரவை குறைக்க முடியுமா என பகல் கனவு காண்கிறார்கள். அவர்களின் பகல் கனவு நிச்சயம் நிறைவேறாது. அதற்குக் காரணம் தமிழக பெண்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். யார் தங்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை வழங்குவார்கள், அவர்களுக்கான திட்டங்களை யார் செயல்படுத்துவார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள்.

த.வெ.கவிற்கு பெண்கள் வாக்கு வங்கி கிடையாது. அதனால் பாஜகவின் C டீமான விஜய் திமுக அரசை குறைகூறுகிறார். பா.ஜ.க வின் ‘B’ டீம் குறித்தே நாங்கள் கவலைப்பட மாட்டோம் அப்படி இருக்கையில் C டீம் குறித்தும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றார்.

  • how many crores loss for kamal haasan if thug life movie not release மன்னிப்பு கேட்கலைனா இவ்வளவு கோடி நஷ்டம்? மொழி விவகாரத்தில் ரிஸ்க் எடுக்கும் கமல்ஹாசன்? 
  • Continue Reading

    Read Entire Article