ARTICLE AD BOX
கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதலனுடன் அடிக்கடி விடுதியில் சந்தித்து உல்லாசமாக இருந்த காதல் ஜோடியின் ஷாக் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கேரளா கொல்லம் குண்டறா பகுதியை சேர்ந்த அகிலா என்ற பெண் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அவருக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த பினு என்பவருக்கு இடையே தகாத உறவு ஏற்பட்டது. பினுவை தனிமையில் சந்திக்க அடிக்கடி ஒரே விடுதியை இருவரும் தேர்வு செய்தனர்.
திருட்டுத்தனமாக அந்த விடுதியில் உல்லாசமாக இருந்துள்ளனர்.ஒரு நாள், இருவரும் உல்லாசமாக இருந்த போது, திருமணம் செய்ய சொல்லி அகிலா வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் பினு, சம்மதிக்கவில்லை. இந்த உறவு இப்படியே இருந்தால் நல்லது என கூறியுள்ளார். இதைக் கேட்க மறுத் அகிலாலை, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

உடனே தனது நண்பர்களுக்கு வீடியோ கால் செய்து, கொலை செய்து விட்டேன என அகிலா உடல் அருகே அமர்ந்து காண்பித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனே காவல்துறை தகவல் அளித்ததுள்ளனர்.

உடனே விடுதிக்குள் நுழைந்த போலீசார். பினுவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளின் தாய் உயிரிழந்தது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
