ARTICLE AD BOX
மதுரையில் நடந்த கோவில் திருவிழாவில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. திமுக அவைத் தலைவர் ஒச்சி பாலு கூறியதில் கேட்டரிங்க நிறுவனம் அன்னதானம் வழங்கியது.
ஆனால் கேட்டரிங் நிறுவனத்துக்கு பணம் கொடுக்காமல், ஒச்சி பாலு கேட்டரிங் உரிமையாளரை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருட்டும், சுரண்டலும் DMK-வின் அடிப்படை குணாதிசயத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன.
அக்கட்சியினர் அடிக்கடி வலியுறுத்தும் ‘சமூக நீதி’ என்ற உயர்ந்த கோஷம் நடைமுறையில் வெறும் வாயாடலாகவே மாறி விட்டது. தங்கள் சொந்தக் கட்சி அமைப்பினுள் கூட, உண்மையான சமூக நீதி செயல்படுத்துவதில் DMK தொடர்ந்து தோல்வியடைந்து வந்துள்ளது.

இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மதுரையைச் சேர்ந்த DMK நிர்வாகியான ஒச்சு பாலு என்பவரின் நடத்தை. அவரிடம் வேலை செய்து முடித்த ஒருவர் தக்க கூலி கேட்டு வந்தபோது, அவர் அதற்கு பதிலாக சாதி அடிப்படையிலான இழிவுரைகளையும் அவதூறுகளையும் கூறி, பொதுமக்கள் முன்னால் அவமானப்படுத்துவேன் என மிரட்டியுள்ளார்.
Stealing and exploiting runs deep in the very DNA of the DMK. The lofty rhetoric of Social Justice that the party never tires of repeating has remained little more than lip service, and in practice, the DMK has consistently failed to implement social justice in its truest spirit,… pic.twitter.com/KKPeyWmY6A
— K.Annamalai (@annamalai_k) September 17, 2025இந்தச் சம்பவம் தனித்துவமானது அல்ல; மாறாக, DMK-வின் உண்மையான முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியே ஆகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
