திருநங்கை கொடூர கொலை… உடலை துண்டு துண்டாக வெட்டிய காதலன் : போலீஸ் குவிப்பால் பதற்றம்!

1 month ago 42
ARTICLE AD BOX

திருநங்கையை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பையாவரம் நகரில் திருநங்கை படுகொலை செய்யப்பட்டார்.

இதையும் படியுங்க : காதல் கணவரை 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் சிமெண்ட் போட்டு மூடிய மனைவி.. இறுதியில் யாரும் எதிர்பாரா சம்பவம்!

இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த திருநங்கை தீப்பு என்பவரும் பன்னி என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் பன்னி தன்னுடைய காதலி தீப்புவை ஊருக்கு வெளியே வரவழைத்து அடித்து கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை தனித்தனியாக மூட்டை கட்டி சாலை ஓரத்தில் வீசி சென்று விட்டான்.

Transgender Brutal Murder

சம்பவம் பற்றிய தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் தீப்புவின் உடல் பாகங்களை மீட்டு வழக்கு பதிவு செய்து பன்னியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

தங்களுடைய தோழியை கொலை செய்த பன்னியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி திருநங்கைகள் காவல் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டனர்.

Deceased in brutal murder on NH-16 in Anakapalli a transgender

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த போலீசார் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

  • Trisha Krishnan என்னங்க சொல்றீங்க? த்ரிஷா படைத்த உலக சாதனை.. ஆனால் ‘அது’..!
  • Continue Reading

    Read Entire Article