ARTICLE AD BOX
சின்னத்திரை காமெடி நாயகனாக வலம் வருபவர் நாஞ்சில் விஜயன். விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவலாக அறியப்பட்ட அவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளது. இதனிடையே நேற்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாஞ்சில் விஜய் மீது திருநங்கை ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
அதில், கடந்த ஏழு ஆண்டுகளாக இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்ததாகவும், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக நாஞ்சில் விஜயன் தன்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும், திடீரென விலகிச் செல்வதாகவும் அந்த திருநங்கை குற்றம்சாட்டியுள்ளார்.
தங்கள் நட்பை மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த புகார், சமீபத்தில் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜன் மீது அவரது இரண்டாவது மனைவி அளித்த புகாரால் தைரியமடைந்து தெரிவிக்கப்பட்டதாக அந்த திருநங்கை கூறியுள்ளார்.
சினிமா பிரபலங்கள் மீது இதுபோன்ற சர்ச்சைகள் தொடர்ச்சியாக எழுந்து வருவது, ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.இந்த சர்ச்சை குறித்து நாஞ்சில் விஜயன் இதுவரை வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நேரத்தில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
வெள்ளை வேஷ்டி-சட்டையில் சிரித்தபடி மேடையில் பேசும் புகைப்படத்துடன், “உன்னை பற்றி யாரு என்ன சொன்னால் என்ன… நீ இந்த காதில் வாங்கி அந்த காதில் விடு” என்ற பாடல் வரிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில், ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக், “வா தலைவா வா தலைவா” என கமெண்ட் செய்ய, அதற்கு நாஞ்சில் விஜயன் “நன்றி ஐயா” என பதிலளித்துள்ளார். ஆனால், இந்த உரையாடலைப் பார்த்த ரசிகர்கள், இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஒரு தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான புகார் எழுந்துள்ள நிலையில், இப்படி மறைமுகமாக பதிவிடுவது தவறு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

1 month ago
37









English (US) ·