ARTICLE AD BOX
கோபிசெட்டிபாளையம் அருகே இரு வீட்டார் சம்மதத்துடன் திருநங்கையை கரம் பிடித்த வாலிபருக்கு வாழ்த்துகள் குவிகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த 32 வயதுள்ள சரவணக்குமார் டெக்ஸ்டைல் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகிறார்.
இதே நிறுவனத்தில் பணிபுரியும் சேலம் மாவட்டம் மணியனூரைச் சேர்ந்த 30 வயது உள்ள திருநங்கை சரோ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மனிதம் சட்ட உதவி மய்யம், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன் தலைமையில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டார் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
