திருந்த மாட்டேல, வருந்த மாட்டேல- மீண்டும் மீண்டும் காப்பியடிக்கும் ராக்ஸ்டார் அனிருத்?

1 day ago 3
ARTICLE AD BOX

மீண்டும் மீண்டும்

கோலிவுட்டின் ராக்ஸ்டார் என்று புகழப்படுபவர் அனிருத். GenZ தலைமுறையினரின் Pulse-ஐ பிடித்துக்கொண்ட அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளராக இருக்கிறார். 

anirudh coolie song copied from the american rap song

ஆனால் பல ஆங்கில பாடல்களில் இருந்து ட்யூன்களை உருவி மெட்டமைக்கிறார் என்று இவர் மீது ஒரு புகார் அடிக்கடி எழுவது உண்டு. “கோலமாவு கோகிலா” திரைப்படத்தில் இவர் இசையமைத்த “கல்யாண வயசுதான்” என்ற பாடல் Chibz என்ற ஆங்கிலப் பாடலில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என கூறப்பட்டது. 

அதனை தொடர்ந்து பல பாடல்களை அவர் காப்பியடித்தே மெட்டமைக்கிறார் என்று புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் இது மாதிரியான ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அனிருத். 

டீசரால் வந்த வினை

சமீபத்தில் “கூலி” திரைப்படத்தின் கவுன்டவுன் டீசர் ஒன்று வெளியாகியிருந்தது. இதில் பின்னணியில் அனிருத்தின் இசையில் “அரங்கம் அதிரட்டுமே” என்ற பாடல் ஒலித்தது. இந்த நிலையில் இப்பாடல் அமெரிக்காவைச் சேர்ந்த ராப் பாடகரான லில் நாஸ் எக்ஸின் “இன்டஸ்ட்ரி பேபி” என்ற பாடலில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக தற்போது இரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 

இவ்வாறு அனிருத் மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கிவருவது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாது இசை ரசிகர்கள் பலரும் “திருந்துறதா எண்ணமே இல்லை போல” என்பது போன்ற வார்த்தைகளால் இணையத்தில் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். 

  • anirudh coolie song copied from the american rap song திருந்த மாட்டேல, வருந்த மாட்டேல- மீண்டும் மீண்டும் காப்பியடிக்கும் ராக்ஸ்டார் அனிருத்?
  • Continue Reading

    Read Entire Article