திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!

1 month ago 34
ARTICLE AD BOX

திருமலை ஒன் டவுன் காவல் நிலையத்தில் ஜனசேனா திருப்பதி பொறுப்பாளர் கிரண் ராயல் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதையும் படியுங்க: எப்ப பார்த்தாலும் நித்யா மேனனை த***ட்டே இருப்பான் : இயக்குநரை ஒருமையில் விளாசிய பிரபலம்!

அதில் “ஸ்ரீனிவாச கோவிந்தா” பாடலை பக்தர்களின் மன உணர்வுகளை புண்படுத்தும் விதமாக சித்தரித்த படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.

தமிழ்நாடு அரசு இந்துக்களின் மன உணர்வுகளின் மீது தாக்குதல் நடத்துவது தெளிவாகத் தெரிகிறது.தணிக்கை குழு அனுமதி அளித்தது என்று படக்குழுவினர் கூறுவதைப் பார்த்தால், அங்குள்ள அரசு ஒத்துழைப்பது போல் தெரிகிறது.

தமிழ்நாட்டில் நாத்திகர்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடவுள்களை நம்பாதவர்கள் என்பதால் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

திரைப்படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும், இல்லையென்றால் படம் வெளியாகாமல் தடுக்க வேண்டும். ஏழுமலையான் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சித்தரிக்கப்பட்ட திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்.

அதுவரை தமிழ்நாடு மாநில மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரிசனம் வழங்கக்கூடாது என்று கோரிக்கை வைக்கிறோம்.

  •  Sudden demand! திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!
  • Continue Reading

    Read Entire Article