ARTICLE AD BOX
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் அவரது மகனுடன் திருமலைக்கு வந்தார்.
இதேபோன்று கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்த கோவிந்தராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் 13 பேர் திருமலைக்கு வந்திருந்தனர். இவர்கள் இரண்டு குடும்பத்தினரும் திருமலையில் அறைகள் ஒதுக்கீடு செய்யும் சிஆர்ஓ அலுவலகம் அருகே காத்திருந்தனர்.
அப்போது கோவிந்தராஜன் குடும்பத்தினர் தாங்கள் வைத்திருந்த உடமைகள் பை அருகே கார்த்திகேயனின் 7 வயது மகன் இருந்ததால் அந்த சிறுவனை இழுத்து விட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த கார்த்திகேயன் என்னிடம் கூறினால் எனது மகனை நான் தள்ளி அமரும்படி கூறியிருப்பேன் நீங்கள் ஏன் தள்ளி விட்டீர்கள் என கேட்டுள்ளார்.
இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் கார்த்திகேயன் அடித்ததில் கோவிந்தராஜன் தரப்பினருக்கு பலருக்கு இரத்தம் கொட்டியது.

உடனடியாக அங்கு வந்த தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கார்த்திகேயன் மற்றும் கோவிந்தராஜன் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இரு பக்தர்கள் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் சிஆர்ஓ அலுவலகம் அருகே அறைகள் வாங்குவதற்காக வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏறஏற்படுத்தியது.