ARTICLE AD BOX
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் சுமார் பல லட்சத்துக்கும் மேற்பட்ட அடிப்படை வசதிக்கு உண்டான நலத்திட்டங்களை நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா இன்று துவங்கி விட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ஆ.ராசாவிடம் மத்திய அரசு 5 சதவீதம் மற்றும் 18 வரி சதவீதம் வரும் 22 ஆம் தேதி வரி மத்திய அரசு அறிவித்துள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது 50 சதவீதம் வர என்ன ஆயிற்று இதை கொண்டு வந்ததன் மூலமாக இந்தியாவில் காப்பாற்றி விட்டார்களா, என கூறினார்.
மேலும் செய்தியாளர்கள் இதனால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விலை குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஆ. ராசா தொடர்ந்து பதட்டமாக பேசிய அவர் திருப்பூரில் உள்ள பொதுமக்கள் வாழ்வாதாரம் என்ன ஆயிற்று? அவர்கள் அடிப்படை உரிமை கூட போய்விடும் எனவும் தட்டு வடைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு என்ன வலி என்பதை கேட்கும் விதமாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் செங்கோட்டையன் நாளை மனம் திறக்கின்றேன் என்று சொன்ன வார்த்தைக்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் திறக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் என தெரிவித்து சென்றார்.
