ARTICLE AD BOX
நடிகர் விஷாலுக்க 47 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இதனால் அவரை பார்க்கும் இடங்களில் எல்லாம், எப்போது உங்கள் திருமணம் என ஒரு கூட்டம் அலைமோதும்.
அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷால், எனக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. நடிகர் சங்க கட்டிடம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திறக்கப்படுகிறது. அது முடிந்தததும் அன்றைய மாதமே என்னுடை திருமணம் நடக்கும். பெண் யார் என்று அறிவிப்பேன் என கூறியிருந்தார்.
திடீரென சென்னையில் நடந்த யோகி டா பிரமோஷன் நிகழ்ச்சியின் போது, நடிகை தன்ஷிகாவை காதலிப்பதாக மேடையில் விஷால் அறிவித்தார். இரண்டு பேருமே தங்கள் திருமணம் குறித்த பொது வெளியில் அறிவித்தனர்.

பெரும் பரபரப்பாக பேசப்பட்ட இவர்களின் காதல். ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்ய போவதாக இருவரும் அந்த மேடையில் அறிவித்தனர். அதன்படி, தற்போது பத்திரிகைகளை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு இருவரும் கொடுத்து வருகின்றனர்.
வருடங்கள் பல கடந்த போதிலும் நட்பும் அன்பும் என்றும் தேயாது pic.twitter.com/e8nBcFIYKO
— Vijay Vasanth (@iamvijayvasanth) May 26, 2025இருவரும் சேர்ந்து பத்திரிகைகளை வைத்து வரும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் தனது நண்பருமான எம்பி விஜய் வசந்த்தை, விஷால் கட்டியணைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
