திருமணமாகி ஒரே மாதத்தில்… மனைவியை சுட்ட கணவன்… நொடியில் இரட்டைக் கொலை!

1 month ago 20
ARTICLE AD BOX

விழுப்புரத்தில் திருமணமாகி ஒரே மாதத்தில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் விக்கிரவாண்டி வாக்கூர் அருகே தென்னரசு என்ற 28 வயது நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் லாவண்யா என்பவரை திருமணம் செய்தார்.

திருமணமானது முதலே தென்னரசு தினமும் குடிபோதையில் தான் வீட்டுக்கு வருவார். இதனால் கணவன் – மனைவிக்கு இடையே பிரச்சனை எழுந்தது.

கடந்த 12ஆம் தேதியும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கணவனிடம் மனைவி வாக்குவாதம் செய்ததால், ஆத்திரமடைந்த கணவன், ஏர்கன் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுள்ளார்.

தடுக்க வந்த தென்னரசு தாயையும் சுட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரும், உறவினருமான வழக்கறிஞரையும் சுட்டுவி வீழ்த்தினார்.

இதில் சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் உயிரிழக்க, மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்ட லாவண்யாவும் உயிரிழந்தார். தீவிர சிகிச்சையில் தாய் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தென்னரசுவை கைது செய்த போலீசார்,இரட்டைக் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Actor saravanan said about director bala in good aspect மனித தன்மையே இல்லாத இயக்குனர்? அவர் செஞ்ச ஒரு விஷயம்? பாலா குறித்து பிரபல நடிகர் ஓபன் டாக்!
  • Continue Reading

    Read Entire Article