ARTICLE AD BOX
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி பகுதி சேர்ந்த 17 வயது சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி காவல்துறையினர் சிறுமியின் கணவர் சக்திவேலை போக்சோ அதாவது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று திடீரென அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமி ஏற்கனவே கர்ப்பமாகி இருந்ததாகவும் அவர்கள் வீட்டார் சிறுமிக்கு கர்ப்பத்தை கலைக்க மாத்திரை கொடுத்து அதிகளவில் சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிறுமி கர்ப்பமான அதாவது இரண்டு மாதம் மற்றும் மூன்று மாதம் ஆகிய சிசுவை கலைத்து மண்ணுக்குள் புதைத்து விட்டதாக கணவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினர் புதைக்கப்பட்ட சிசுவை எடுத்து ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினர் அனுமதிக்காமல் அலட்சியம் செய்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
