ARTICLE AD BOX
கன்னட நடிகை
“மரிபாலே” என்ற துளு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர்தான் பாவனா ராமண்ணா. இவர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், “அன்புள்ள காதலுக்கு”, “நட்சத்திர காதல்”, “ஆஹா எத்தனை அழகு” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது 40.
திருமணம் செய்துகொள்ளவில்லை
40 வயதாகியும் இவருக்கு திருமணம் செய்துகொள்ள ஆசையில்லை. எனினும் குழந்தை பெற்றுக்கொள்ள இவருக்கு அதீத விருப்பம் இருந்தது. ஆதலால் செயற்கை கருத்தரிப்பு முறையில் ஐவிஎஃப் சிகிச்சை மூலம் கர்ப்பம் தரித்தார். இவருக்கு இரட்டை குழந்தைகள் உண்டாகியிருந்தன.

தான் இரட்டை குழந்தைக்கு தாயாக உள்ளதாக மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தார். சமீபத்தில் கூட அவருக்கு வளைகாப்பு நடந்தது. இந்த நிலையில்தான் 7 ஆவது மாதத்தில் அவரது கருவில் இருக்கும் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிரச்சனை இருப்பது ஸ்கேன் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக 8 ஆவது மாதத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

துயர சம்பவம்…
அப்போதுதான் அந்த துயர சம்பவம் நடந்தது. அதாவது அறுவை சிகிச்சை செய்தபோது அவரது இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. எனினும் மற்றொரு குழந்தை நலமோடு இருப்பதாக கூறப்படுகிறது. அது ஒரு பெண் குழந்தை எனவும் தெரிய வருகிறது. இவ்வாறு திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார் பாவனா. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
