ARTICLE AD BOX
நெல்லையில் பட்டியலின இளைஞர், மென்பொருள் பொறியாளர் கவின் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் காதலித்த பெண்ணின் தம்பியே சாதியை காரணம் காட்டி கொலை செய்தது புயலை கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் காதலியின் தம்பி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காதலியின் பெற்றோர்களான காவல் ஆய்வாளர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
கவினின் தந்தை சந்திரசேர், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிஐ விசாரணை செய்ய வேண்டும், நிதி வேண்டாம் நீதி வேண்டும் என கூறியுள்ளார். மேலும் எங்கள் தலைவர் திருமாவளவன் இந்த சம்பவத்தை பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, ஆணவக் கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து கவின் தந்தைக்கு செல்போன் மூலம் பேசிய திருமாவளவன் ஆறுதல் கூறினார். நேரில் வந்து பேசுகிறேன், கவலைப்படாமல் இருங்கள் உங்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம் என பேசியிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நெல்லை பக்கம் போக வேண்டாம் என திருமாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், சாதிய படுகொலைகளை சகித்துக் கொள்ள சொல்கிறதா திமுக அரசு? அந்த இளைஞன்,நல்ல வேலையில் இருந்தாலும் தங்கள் சாதியில் இல்லை என்று அவனை வெட்டிக் கொல்லும் அளவிற்கான துணிச்சல் கொலையாளிக்கு எங்கிருந்து வந்தது? யார் அதனை தந்தது?
நெல்லையில் சாதிய வன்கொடுமைகளே இல்லை என்கிறார் அப்பாவு. கொலைகள் சொந்த காரணங்களால் நடக்கிறது என்கிறார் அமைச்சர் ரகுபதி.
தங்கள் குடும்பத்தில்-நெருங்கிய உறவுகளில் ஒருவரை இழக்கும் வரை இந்த ஆட்சியாளர்கள் இவற்றை வேடிக்கை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்!
முதல்வரை வாழ்த்துவதற்காக அடிக்கடி தலைமை செயலகம் சென்றாலும் தலித் மக்களின் இன்னல்கள் தீர்ந்த பாடில்லை! “தலித் மக்களின் பாதுகாவலர் அண்ணன் தளபதி தான்” எனக் கூறிக் கொண்டு தோழர் திருமா நெல்லை பக்கம் சென்றிட வேண்டாம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
