ARTICLE AD BOX
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்க: வெளியே வந்ததும் உன்னை கொன்னிடுவேன்… நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள்!
முக்கியமாக பரம எதிரிகளான திருமாவளவனும், ராமதாசும் கைக்கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்ட ஸ்டாலினுக்கு வெற்றி என்றே கூறப்படுகிறது.
பாஜகவும் – அதிமுகவும் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளதால், கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் ஏற்படும் இழப்பை சரி செய்ய ஸ்டாலின் மெகா கூட்டணிக்கு திட்டமிட்டுள்ளார்.
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதால், அங்கு அதிமுகவை வீழ்த்த திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதையெல்லாம் கணக்கு போட்டு வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், தன்னுடைய கூட்டணியை மேலும் பலப்படுத்த பாஜகவில் உள்ள பாமகவை தன்பக்கம் இழுக்க துரைமுருகனை வைத்து காய்கள் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
பாஜக மற்றும் பாமகவுடன் ஒரு போதும் கூட்டணியில்லை என கூறி வருகிறார் திருமாவளவன். பரம எதிரிகளாக இருக்கும் இந்த இரு கட்சிகளை பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் இணைக்க வைக்க ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கடைசியாக 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவும், பாமகவும் இணைந்து போட்டியிட்டது. தருமபுரி இளவரசன் – திவ்யா விவகாரத்திற்கு பிறகு இரண்டு கட்சிகளும் மாறி மாறி சாடிக் கொண்டன. இதன் பின்னர்தான் பாஜக உடன் மட்டுமல்ல பாமக இடம்பெறும் கூட்டணியில் விசக இணையாது என திருமாவளவன் அறிவித்திருந்தார்.
14 வருடங்களுககு பிறகு மனம் மாறி இரு கட்சிகளும் கூட்டணிக்காக இணைய உள்ளது. சமீபத்தில் கூட வன்னியர் சங் மாநாட்டிற்கான அழைப்பிதழை பாமக முக்கிய நிர்வாகிகள் திருமாளவளவனை சந்தித்து அளித்தனர்.

6 months ago
68









English (US) ·