திருவண்ணாமலை கோவிலில் அம்மன் சிலைக்கு ரேஷன் சேலை அணிவிப்பு : பக்தர்கள் கொந்தளிப்பு!!

9 months ago 98
ARTICLE AD BOX
tiru

உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பவுர்ணமியின்போது கோவிலில் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள அம்மன் சிலைக்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் விலையில்லா சேலை அணிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: யாரை ஏமாற்ற முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் போடுறாரு? இனி தப்பிக்க முடியாது : அண்ணாமலை எச்சரிக்கை!

இதுகுறித்து அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் கூறுகையில்: திருவூடல் நிகழ்ச்சியில் மண்டக படியின்போது பக்தர்கள் சிலர் அம்மனுக்கு சேலையை சாத்தினர். இதில், பக்தர் ஒருவர் ரேஷன் சேலையை வழங்கியதாகவும் அதை பவுர்ணமியின் போது அம்மன் சிலைக்கு அந்த ரேஷன் கடைசேலை அணிவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் சேலை மாற்றப்பட்டதாக கூறினார்.

The station திருவண்ணாமலை கோவிலில் அம்மன் சிலைக்கு ரேஷன் சேலை அணிவிப்பு : பக்தர்கள் கொந்தளிப்பு!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article