ARTICLE AD BOX
ஃபகத் ஃபாசில்-வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்த “மாமன்னன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து “மாரீசன்” திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். வடிவேலு இத்திரைப்படத்தில் Alzheimer என்ற மறதி நோயாளியாக நடித்துள்ளார்.
 மறதி நோயில் இருக்கும் வடிவேலு திருவண்ணாமலை செல்ல முடிவெடுக்கிறார். அவர் நிறைய பணம் வைத்திருப்பதை ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது ஃபகத் ஃபாசில் பார்த்துவிடுகிறார். இந்த பணத்தை எப்படியாவது திருடிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் வடிவேலுவை தனது பைக்கிலேயே திருவண்ணாமலைக்கு கூட்டிச்செல்கிறார். இறுதியில் ஃபகத் ஃபாசிலின் எண்ணம் நிறைவேறியதா என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை ஆகும்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் தற்போது வெளிவந்துள்ளது. இதில் ஃபகத் ஃபாசில்-வடிவேலு ஆகியோருடன் கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுதீஷ் சங்கர் இயக்கத்தில் ஆர் பி சௌத்ரி தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் இதோ…
 
                        3 months ago
                                41
                    








                        English (US)  ·