தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

1 month ago 17
ARTICLE AD BOX

காசநோயால் அவதி

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் வெற்றி பெற்ற நடிகையாக வலம் வந்துள்ளார்.

இதையும் படியுங்க: முடியல..கெஞ்சி கேக்குற விடுங்க…வைரலாகும் தமன்னா வீடியோ.!

இவருடைய திறமையான நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.மேலும், ‘இந்திரா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகவும் முத்திரை பதித்தார்.

சுஹாசினி,தனது கணவர் மணிரத்னத்துடன் சேர்ந்து ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.இதற்காகவே பல தரமான சினிமாக்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.அதுமட்டுமன்றி, ‘நாம் அறக்கட்டளை’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம்,ஆதரவற்ற பெண்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில்,சமீபத்தில் நடிகை சுஹாசினி,தனது உடல்நிலை குறித்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.அவருடைய சொற்பொழிவின் போது “நான் ஆறுவயதில் இருந்தே டி.பி (காசநோய்) பாதிப்பு அடைந்தேன்.

சிறிய பருவத்திலேயே இதற்கான சிகிச்சை எடுத்ததால் எல்லாம் சரியாகி விட்டது. ஆனால் 36 வயதில் மீண்டும் அதே நோய் வந்துவிட்டது. இதனால் என் உடல் எடை திடீரென அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும், இந்த நோய் என் கேட்கும் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தியது” என்று கூறினார்.

இதையடுத்து சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு எந்நேரமும் மன உறுதியுடன் இருந்ததன் காரணமாக தற்போது முழுமையாக குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.தான் இந்த வியாதியை எல்லோரிடமும் பகிர்வதை,முதலில் வெட்கமாக நினைத்தாலும்,இன்று இதை வெளிப்படையாக கூறுவது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே என தெரிவித்துள்ளார்.

  • Suhasini Maniratnam health update தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!
  • Continue Reading

    Read Entire Article