ARTICLE AD BOX

வீட்டில் கேஸ் சிலிண்டர் தீர்ந்து போன நிலையில் பக்கத்து வீட்டில் வாங்கிய சிலிண்டர் பற்ற வைத்த போது உடனே வெடித்ததில் பெண் பலி ஒருவர் படுகாயம்
சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகர், 5வது விரிவு தெரு முதல் மாடியில் வாடகை வீட்டில் வசித்து வந்த லின்சி பிளஸினா(26) நங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவரது வீட்டில் சமையல் கேஸ் தீர்ந்து விட்டதால் கடந்த 7ம் தேதி இரவு தாம்பரம் அருகே கௌரிவாக்கத்தில் வசிக்கும் அவருடன் வேலை பார்க்கும் மணிகண்டன்(30) என்பவரிடம் சிலிண்டர் கேட்டதின்பேரில் மணிகண்டன் அவரது வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை கொண்டு வந்து லின்சி வீட்டில் பொருத்தி ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மளமளவென தீ பரவியதில் லின்சியின் 2 கைகள், மார்பு, கால் தொடை என் பல பகுதிகளிலும் தீக்காயமும் மணிகண்டனுக்கு இரு கைகள் பின்பக்க முதுகு என 45% தீ காயம் ஏற்பட்டது.
இருவரும் அலறி துடித்த அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி லின்சி பிளசினா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The station தீர்ந்து போன கேஸ்… பக்கத்து வீட்டில் வாங்கிய சிலிண்டர்.. நொடியில் நடந்த விபத்தில் பெண் பலி..! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.