துணை முதலமைச்சர் vs துணை முதலமைச்சர்.. உதயநிதியை விமர்சித்த பவன் கல்யாண்..!

7 months ago 89
ARTICLE AD BOX
Udhayanidhi

சனாதனத்தை எதிர்ப்பவர்கள் அழிந்து போவார்கள் என்றும், அண்டை மாநில இளம் தலைவர் என துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தனசேகர கட்சியின் வாராகி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய உரையின் ஒரு பாகமாக பேசிய பவன் கல்யாண் இங்கு நிறைய பேர் தமிழ் பேசுபவர்கள் இருக்கிறீர்கள் எனவே தமிழில் கூறுகிறேன்.

அண்டை மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் தலைவர் சனாதன தர்மம் வைரஸ் போன்றது. அதை அழிக்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு பேசுபவர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவித்து கொள்கிறேன். சனாதன தர்மத்தை உங்களால் அளிக்க இயலாது. ஆனால் நீங்கள் அழிந்து போவீர்கள்.

ஏன் அழிந்து போவீர்கள் என்பதை என்னுடைய உரையின் இறுதியில் கூறுகிறேன் என்று கூறினார். முன்னதாக சனாதன தர்மத்தை தாக்கிப் பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது செக்யூலரிசம் ஆகாது.

நம்முடைய ராமரை தாக்கி பேசியவர்களை உற்சாகப்படுத்தினீர்கள். இதுபோல் செயல்படக்கூடாது அப்படி செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

The station துணை முதலமைச்சர் vs துணை முதலமைச்சர்.. உதயநிதியை விமர்சித்த பவன் கல்யாண்..! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article