ARTICLE AD BOX
மதுரை மாநகர் கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது என்பவர் 2019 ஆம் ஆண்டு சிவகங்கையை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி பின்னர் விவாகரத்து ஆன நிலையில் துபாயில் தங்கி வேலை பார்த்துவந்துள்ளார்.
ஹாரிஸ் முகம்மதுவுடன் அறையில் இருந்த நண்பர் ஒருவரின் கல்லூரி தோழி தனது இரு குழந்தைகளுடன் தனியாக உள்ளார்.
அதனால் அவருடன் பழகி திருமணம் செய்துகொள் என கூறி மதுரை திருப்பாலை, கணபதி கடையப்பா நகரை சேர்ந்த ஜெனிபர் என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்து 2019 ஆம் ஆண்டு ஜெனிபரின் தாயாரின் மூலமாக ஜெனிபரிடம் பேசியுள்ளார்.
அப்போது ஜெனிபர் தனது கணவர் பீர்முகம்மது தினமும் மது குடித்துவந்து அடித்து கொடுமைபடுத்துவதாகவும், ஆண் நண்பர் ஒருவருடன் ஓரினசேர்க்கையில் ஈடுபடுவதாகவும் அதனால் கணவருடன் வாழ முடியாது என்பதால் அப்பா வீட்டிற்கு வந்துவிட்டேன் என தனது கதையை பேசி பகிர்ந்துள்ளார்.
அப்போது நாம் இருவரும் பேசி பழகுவோம் எனக்கு டைவர்ஸ் கிடைத்ததும் கல்யாணம் பண்ணிக் கொள்வோம் என ஜெனிபர் கூறியதோடு அவரது பெற்றோரும் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் ஜெனிபரின் பெற்றோர், ஹாரிஸ் முகமதுவிடம் பேசி ஜெனிபர் MBA படிக்க விரும்புகிறாள் எப்படியும் உங்களுக்கு மனைவியாக ஆகப்போறவள் தானே நீங்களே படிக்க வையுங்கள் எனவும், கல்யாண பத்திரிக்கையில் ஜெனிபர் பெயருக்கு பின்னால் MBA என்று போட வேண்டும். ஆகவே படிக்க வையுங்கள் என கூறியதால் பூனேவிலுள்ள கல்வி நிறுவனம் மூலமாக ஜெனிபரை MBA படிக்க வைத்துள்ளார்.
அதன் பின்னர் ஜெனிபரும் அவரது பெற்றோரும் ஜெனிபரின் கணவர் நகை பணம் கொடுக்கவேண்டும் நீங்கள் பணம் கொடுத்தால் உடனே விவாகரத்து வாங்கி விடுகிறோம் என்று கூறியதால் ஜெனிபரின் தாயார் யாஸ்மின் வங்கி கணக்கில் 17 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார்
அதனையடுத்து ஹாரிஸ் முகம்மது காதில் பூ சுற்றுவது போல அடுக்கடுக்காக கதைகளை கூறி ஏமாற்றியுள்ளனர். அப்போது ஜெனிபரும் அவரது பெற்றோரும் மதுரையை சேர்ந்த கணேசன் பூசாரி என்பவர் பூஜை செய்தால் பீர் முகமது உடனடியாக விவகாரத்து கொடுத்துவிடுவார் என ஆசைகாட்டி பூசாரியையும் பேச வைத்துள்ளனர்.
பூஜைக்கான செலவு என கூறி பூசாரியின் மகள் வங்கி் கணக்கில் 1.5 லட்சம் அனுப்பியுள்ளார். பின்னர் பூசாரிக்கு தங்க செயின் மற்றும் மோதிரம் மற்றும் ப்ராண்ட்டு வாட்சுகள் என லட்சக்கணக்கான ரூபாய்க்கு கிப்ட் வாங்கி கொடுத்துள்ளார்.
பின்னர் ஜெனிபர் சொகுசாக இருப்பதற்காக 2020ஆம் ஆண்டு துபாயிலிருந்து வந்தபோது 3 பவுன் தங்க செயின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், கட்டில் மெத்தை பீரோ பிரிட்ஜ் கிரில் ஸ்டவ் ஆகியவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
அதன்பின்னர் ஹாரிஸ் ஏடிஎம் கார்டை ஜெனிபரிடம் கொடுத்து பணம் அனுப்புகிறேன் பீர் முகமதுவின் கடனை அடைத்துவிட்டு டைவர்ஸ் வாங்கிவிடு என்று கூறி மீண்டும் துபாய் சென்றுள்ளார்.
இதையடுத்து 2 வருடமாக ஏடிஎம் மூலமாக ஜெனிபர் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை எடுத்தபோதும் விவகாரத்து வாங்கவில்லை
மீண்டும் 2021-ம் ஆண்டு ஜெனிபர் வீட்டிற்கு வந்த ஹாரிஸ் விவகாரத்து குறித்து கேட்டபோது கணவருக்கு ரூ.2. லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அதனால் தலாக் வாங்க முடியவில்லை என கூறியுள்ளனர்
பின்னர் ஹாரிசின் தாயார் ஆயிசா பீவியின் ஏடிஎம் கார்டை கொடுத்து சீக்கிரம் பீர்முகமதுவின் கடனை அடைத்து டைவர்ஸ் வாங்கு என்று கூறிவிட்டு மீண்டும் துபாய்க்கு சென்று ஹாரிஸ் 2021-ம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டுவரை அனுப்பிய 3 லட்சத்தி 70 ஆயிரம் பணத்தை ஜெனிபர் எடுத்துகொண்ட நிலையிலும் விவகாரத்து வாங்காமல் இருந்துள்ளார்.
பின்னர் ஹாரிசிடம் போனில் பேசுவதையும் தவிர்த்துள்ளார். பின்னர் 2022 ஆம் ஆண்டு மதுரைக்கு வந்த ஹாரிஸ் ஜெனிபரின் வீட்டிற்க்கு சென்று அவரது பெற்றோரிடம் கேட்டபோது ஜெனிபர் இறந்துவிடடாள் எங்கள் வீட்டுபக்கம் வராதீர்கள் என கூறியதை நம்பி அழதபடி சோகத்துடன் இருந்துள்ளார் ஹாரிஸ்.

அதன்பின்னர் சந்தேகமடைந்த ஹாரிஸ் ஜெனிபர் குறித்து விசாரித்தபோது ஜெனிபர் தன் கணவன் மற்றும் குழந்தைகளோடு சிவகங்கையில் இருப்பது தெரியவந்துள்ளது
இதையடுத்து ஜெனிபர் அவரது பெற்றோர் யாஸ்மின், ஜாபர் , ஜெனிபரின் கணவர் பீர்முகமது, பூசாரி கணேசன் ஆகியோர் ஒன்றாக இருந்துகொண்டு ஹாரிஸ் முகமதுவை ஏமாற்றி படுமோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிந்து மனம் உடைந்து போன ஹாரிஸ் ஜெனிபரிடம் பேசியபோது அப்படிதான் செய்வேன்.
நகை, பணம் கேட்டு என் வீட்டுபக்கம் வந்தால் உன்னை ஆட்களை வைத்து கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம்,நகை, பொருட்களை வாங்கி ஏமாற்றிய ஜெனிபர், யாஸ்மின், ஜாபர், பீர்முகமது, பூசாரி கணேசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எனது பணம், நகை, பொருட்களை மீட்டுத்தருமாறு மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திலும் திருப்பாலை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஹாரிஸ் முகம்மது அளித்த புகாரின் கீழ் ஜெனிபர் அவரது பெற்றோர் யாஸ்மின், ஜாபர் , ஜெனிபரின் கணவர் பீர்முகமது, பூசாரி கணேசன் ஆகிய 4 பேர் மீதும் திருப்பாலை காவல்துறையினர் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு துபாயில் இருந்த இளைஞரை திருமணம் செய்ய தன் கணவருடன் டைவர்ஸ் செய்ய பணம் வேண்டும் என கூறி உன்னை நினைத்து திரைப்பட பாணியில் பெற்றோர் கணவர் என குடும்பமே சேர்ந்து பல லட்சத்தை மோசடி செய்து செத்துவிட்டதாக கூறி ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியு்ள்ளது.
