துரை தயாநிதி வழக்கில் கோர்ட் செக்? அமலாக்கத்துறைக்கு பச்சைக்கொடி!

2 weeks ago 19
ARTICLE AD BOX

மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் 2012-ல் கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர்.

இதையும் படியுங்க: அடுக்கடுக்காக சொன்ன அண்ணாமலையால் நிரூபிக்க முடியுமா? திருமாவளவன் சவால்..!!

இந்த முறைகேடு தொடர்பாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு தனி வழக்குப் பதிவு செய்து விசாரித்துவந்தது.

பின்னர் துரை தயாநிதிக்குச் சொந்தமான மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் தன்னை விடுக்க கோரி துரை தயாநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகவேல் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

Durai Dayanidhi case.. Green flag for the Enforcement Directorate

அப்போது துரை தயாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துறை தயாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மனரீதியான பிரச்சனைகள் இருப்பதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு முறையிட்டனர்.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துறை தயாநிதியை நேரில் ஆஜர் படுத்தி அவரது மனநிலை குறித்து உறுதி செய்ய வேண்டுமென நீதிபதியிடம் முறையிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கு விசாரணை வரும் 16ம் தேதி திங்கள் கிழமை என்று ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

  • writer jeyamohan told about thug life movie trolls படம் வெளியாகி அரை மணி நேரத்துல ட்ரோல்; எல்லாமே அரசியல்- தக் லைஃப்க்கு முட்டுக்கொடுக்கும் பிரபலம்?
  • Continue Reading

    Read Entire Article