ARTICLE AD BOX
சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நடிகருக்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையும் படியுங்க: இந்த பாலா படத்தில் முதலில் அஜித்தான் நடிக்கவேண்டியது! ஆனால் நான் கடவுள் இல்லை?
சின்னத்திரை பிரபலங்கள் திடீர் மறைவு அதிகரித்து வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நடிகர் பிரபாகரன் பனி விழும் மலர்வனம், காயம், கெட்டி மேளம் உள்ளிட் சீரியல்களில் நடித்து வருகிறார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் நடித்து வரும் இவர், சென்னை முகலிவாக்கத்தில் மனைவி, மகளுடன வசித்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இரவி, ஷூட்டிங் முடித்து வீட்டுக்கு வந்த இவர், சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். ஆனால் சிறிது நேரத்திலயே நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த செய்தி சின்னத்திரை நடிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிரபாகரனின் மகள் 10ஆம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
