ARTICLE AD BOX
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் மண்டல வாரியாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து தரும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகையின் முன் ஆறு நாட்களுக்கும் மேலாக பல தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு 500 லிட்டர் குடிநீர் பாட்டில்களை வழங்கியுள்ளார் பிரபல பாடகி சின்மயி.

துணை நிற்கும் சின்மயி
சென்னை ரிப்பன் மாளிகையின் முன் பல நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்த பாடகி சின்மயி, தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு தண்ணீர் தேவைப்பட்ட நிலையில் 500 லிட்டர் குடிநீர் பாட்டில்களுடன் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார் சின்மயி. இச்செயல் பலரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சின்மயியை பாராட்டி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கே என் நேரு தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் போராட்டக்குழு நிர்வாகிகளுடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பலரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
