தே.ஜ கூட்டணியில் தமிழகத்தில் யார் தலைமை என அமித்ஷாவிடம் கேளுங்கள் : கடுப்பான டிடிவி!

1 month ago 22
ARTICLE AD BOX

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வருகை தந்தார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

பின்னர் திருச்சி உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று பயணிக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டம் அமல்படுத்தப்படும். திமுக அரசு அத்திட்டத்தை நிறுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும் என்பது தெரியும்.

இந்தியாவிலேயே தமிழகம் தனி வருமான உயர்வில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது என்பதற்கு இந்திய வளர்ச்சியும், திட்டங்களும் தான் காரணம். தமிழக அரசியல் காரணமில்லை.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது பள்ளி செல்லும் மாணவர்கள் மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் தலைமை வகிப்பது என்று அமிட்ஷாவிடம் தான் கேட்க வேண்டும்.

மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் என்பதை விட 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் திமுக அரசு வந்த பின்னர் பால் விலை கரண்ட் விலை மலிவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை 40% பேருக்கு தான் வந்தடைந்துள்ளது என கூறுகிறார்கள்
தேர்தல் வருகிறது என்பதற்காக கூடுதலாக கொடுப்பதற்கு திமுக அரசு முயற்சிக்கிறது.

ஆறு மாதம் பொறுமையாக இருங்கள் எங்கள் கூட்டணி வலுபெறும் உறுதியாக திமுகவை வீழ்த்தும். மாநாட்டிற்கு யார் யாரை ஓபிஎஸ் அழைக்கிறார் என பார்த்து கேள்வியை கேளுங்கள்.

மயிலாடுதுறை டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் முழுமையான விவரம் தெரியாமல் கருத்து கூற முடியாது என தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், நிர்வாகிகள் ராஜசேகர், ராம்ஜிநகர் தீனன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

  • Rajini fans angry on lokesh kanagaraj whatsapp display picture ரஜினி ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்திய லோகேஷ் கனகராஜ்ஜின் வாட்ஸ் ஆப் DP? ரணகளமான சோஷியல் மீடியா!
  • Continue Reading

    Read Entire Article