ARTICLE AD BOX
நடிகர் கிங்காங், அதிசயப் பிறவி படம் மூலம் பிரபலமானார். ரஜினிகாந்த் டேப் ரெக்கார்ட்டை நிறுத்தி நிறுத்தி பாட்டு போடுவார். அதற்கு ஏற்றார் போல கிங்காங் ஆடுவார். அந்த பிரேக் டான்ஸ் காமெடி இன்றளவும் பிரபலம்.
அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தார். கந்தசாமி, போக்கிரி போன்ற படங்களில் வடிவேலுவுடன் அவர் சேர்ந்து நடித்த காமெடி இன்றளவும் பிரபலம்.
53 வயதாகும் கிங்காங், மனைவி 2 மகள்கள் மகனுடன் தனியாக வீடுகட்டி சென்னையில் வசித்து வருகிறார். மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு செய்த கிங்காங், திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டார்.
இதையும் படியுங்க: ரிதன்யா வழக்கில் நல்ல செய்தி… மாமியார் சித்ரா தேவிக்கு அதிர்ச்சி கொடுத்த கோர்ட்!!
பத்திரிகை அடித்து, ஊர் ஊராக ஏன் பக்கத்து மாநிலங்களில் உள்ள பிரபலங்களுக்கும் தேடி தேடி பத்திரிகை வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தமிழிசை, திருமாவளவன், டி ராஜேந்தர், விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன், லதா ரஜினிகாந்த் என ஏராளமான பிரபலங்களுக்கு நேரில் சென்று பத்திரிகை கொடுத்தார்.
பெங்களூரு சென்று நடிகர் சிவராஜ்குமார் சந்தித்து பத்திரிகை வைத்தார். ஆனால் அவர் இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை. அன்புமணி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என யாரும் வரவில்லை.

மகளின் திருமண வரவேற்பில், முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன், விஷால், கார்த்தி, தமிழிசை, டி ராஜேந்தர் போன்றோர் மட்டுமே பங்கேற்றனர்.
இதைதவிர கிங்காங் உடன் நடித்த சின்ன சின்ன நடிகர்கள் பங்கேற்றனர். பெரியதாக பிரபலங்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். சின்ன நடிகர் தானே, பிரபலமானவர கிடையாதே என அவரின் இல்லத்தி திருமண விழாவை புறக்கணித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் நெட்டிசன்கள் இதை விமர்சித்து வருகின்றனர்.