ARTICLE AD BOX
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான் என்பவரின் மகன் ஜெபஸ்டீன் (வயது 20).
இதையும் படியுங்க: வெறும் ரீல்ஸ் தான் இந்த படமே.. 20 நிமிஷத்துக்கு மேல பாக்க முடியல : GBU படத்தை விமர்சித்த பிரபலம்!
இவர் நேற்று தேன் எடுப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்று இரவு நேரமாகியும் திரும்பி வராததால் அவரை தேடிச்சென்று பார்த்தபோது காட்டுயானை தாக்கி உயிரிழந்த தாகவும் அதை ஜெபஸ்டீனுடன் சென்றவரிடம் விசாரித்து உறுதி செய்துள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை மீட்டு சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்க் கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.