தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே… சென்னையில் இன்று தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்.!!

11 months ago 121
ARTICLE AD BOX
Postal

தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே… சென்னையில் இன்று தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்.!!

நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டில் இருந்து தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 11 ஆயிரத்து 369 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 63 ஆயிரத்து 751 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களும் என மொத்தம் 75 ஆயிரத்து 120 பேர் உள்ளனர்.

இவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக கடந்த மாதம் 17-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையில் ’12டி’ படிவம் வழங்கப்பட்டது. வீடு விடாக சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் படிவம் வழங்கப்பட்டு, பின்னர் நிரப்பிய படிவங்கள் பெறப்பட்டது.

அதில் 85 வயதுக்கு மேற்பட்டோர் 4 ஆயிரத்து 175 பேரும், மாற்றுத்திறனாளிகள் 363 பேரும் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். விருப்பம் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு உரிமையை வழங்கும் வகையில் தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தபால் வாக்குபதிவானது இன்று (திங்கட்கிழமை) முதல் 13-ந் தேதி வரையில் நடைபெறவுள்ளது. காலை 10.30 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. இந்த பணிக்காக சென்னையில் 67 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

The station தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே… சென்னையில் இன்று தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்.!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article