ARTICLE AD BOX

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி பல்வேறு விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு கொண்டு வருகிறது.
மேலும் படிக்க: இந்த நபர் அதிமுகவா…? அப்ப உடனே தூக்கு… திமுக மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!!!
மேலும், வாக்குப்பதிவு நாள் அன்று அத்தியாவசிய நிறுவனங்களை தவிர மற்ற அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே, வெளிமாவட்டங்களில் வேலை மற்றும் கல்வி பயில்வோர் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக பஸ் போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். அந்தவகையில், தாம்பரம் ரயில் நிலையம், பேருந்து நிலைய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குமரிக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.
பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன் பதிவுப் பெட்டியில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
The station தேர்தல் எதிரொலி… சென்னையில் பேருந்து நிலையம், ரயில்நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.