ARTICLE AD BOX
தேர்தல் நெருங்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் யாரும் மொழியைத் திணிக்கவில்லை. அரசுப் பள்ளிகளில் அரசின் மொழிக் கொள்கையைத் திணிக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எதுவுமே தெரிவிக்காத நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது தேவையற்றது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கூட்டம் நடத்தினால் நாங்கள் அதில் பங்கேற்போம். திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
எல்லோருடைய நோக்கமும் 2026ஆம் ஆண்டில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவதுதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேசத் தேவையில்லை. தேர்தல் நெருங்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று தெரியும்.
நாங்கள் அனைவரிடமும் அன்பாகவேப் பழகுகிறோம். எங்களுக்கு யாரும் எதிரி அல்ல. மீனவர் என்ற போர்வையில் திமுகவினர் போதைப் பொருள் கடத்துவது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தெரியாதா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், கூட்டணி குறித்து சஸ்பென்ஸாக அண்ணாமலை பேசியது தமிழக அரசியல் மேடையில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?
ஏனென்றால், தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக எதுவும் அறிவிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது பேசுபொருளானது. இது குறித்த கேள்விக்கு பிரேமலதா பதிலளிக்காமலேச் சென்றதும் அரசியல் பூகம்பத்தை உண்டாக்கியது. இந்த நிலையில், மீண்டும் பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tags: AIADMK BJP alliance, AIADMK DMDK, annamalai, Edappadi Palaniswami, NDA alliance, premalatha vijayakanth, அண்ணாமலை, அதிமுக தேமுதிக கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த்