ARTICLE AD BOX
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாட செய்ய இருந்ததாக திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டது.
பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைபெற்றது. அதில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார். இது தொடர்பாக தொடர்பாக எம்.பி கதிர் ஆனந்த், அவரின் ஆதரவாளர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய மூன்று பேர் மீதும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951 பிரிவு 125(ஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 171(இ), 171 பி(2) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படியுங்க: டிவியில் பேட்டி வரவேண்டும் என்பதற்காக எதையாவது உளறக்கூடாது : திருமாவளவனுக்கு நயினார் பதிலடி!
இவ்வழக்கு தொடர்பாக வழக்கு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2 வாய்தாக்கலுக்கு எம்.பி கதிர்ஆனந்த் ஆஜராகாததால் இம்முறை கட்டாயம் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து இன்று வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் (பொறுப்பு) வழக்கு விசாரணையை வரும் ஜூன் 5 – ம் தேதிக்கு ஒத்தி வைத்ததோடு, மீண்டும் 5 ஆம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து எம்.பி கதிர்ஆனந்த் புறப்பட்டு சென்றார்.
