ARTICLE AD BOX
முதல்முறையாக சிம்பொனியை 36 நாட்களில் உருவாக்கி அதை லண்டனில் அரங்கேற்ற உள்ளார் இசைஞானி இளையராஜா. இது இந்திய நாட்டுக்கே பெருமையான விஷயம்
இதையும் படியுங்க : 8 மாத குழந்தைக்கு விஷம்.. தகாத உறவால் கொலைகாரனாக மாறிய தந்தை!
இதற்காக இளையராஜாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன், அண்ணாலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
வரும்த 8ஆம் தேதி லண்டனில் இளையராஜா அரங்கேற்ற உள்ளார். இதற்காக இன்று காலை அவர் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகிலேயே தலைசிறந்த இசை குழுவான ராயல் கரீபியன் ஆஃப் லண்டன் அவர்கள் வாசித்து, ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்து இந்த இசையை 8ஆம் தேதி வெளியிட உள்ளோம்.
இது மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என இளையராஜா கூறினார். அப்போது செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.
உடனே ஆவேசமடைந்த இளையராஜா, தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்க வேண்டாம், ஒரு நல்ல நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கிறேன்.
சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்கான பெருமை அல்ல, இந்த நாட்டோட பெருமை. உங்கள் பெருமையாகத்தான் லண்டன் சென்று நிகழ்ச்சி நடத்த போகிறேன் என கூறினார்.