தொட்டதெல்லாம் ஹிட்… லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

9 hours ago 2
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கைதி படம் மூலம் கவனிக்கத்தக்க இயக்குநரானார்.

இதையடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் படமும், கமல்ஹாசனை வைத்து விக்ரம் படமும், மீண்டும் விஜய்யை வைத்து லியோ படமும் இயக்கினார். அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன.

இதையும் படியுங்க : என்னங்க இதுல எல்லாமே கிடைக்குது.. Grok AI என்றால் என்ன? பயன்பாடுகள் என்னென்ன?

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். குறுகிய காலத்தில் உசம் தொட்ட இயக்குநராக உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கோவையை சேர்ந்த லோகேஷ் கனகராஜ்க்கு இன்று 39வது பிறந்தநாள். தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைொடுத்த லோகேஷ் கனகராஜ்க்க வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் அவருடைய சொத்துமதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அவருக்கு ரூ.100 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

Lokesh Kanagaraj Birthday

மேலும் ஒரு படத்துக்காக அவர் வாங்கும் சம்பளம் ரூ.50 கோடி என கூறுப்படுகிறது. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Lokesh Kanagaraj Birthday தொட்டதெல்லாம் ஹிட்… லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
  • Continue Reading

    Read Entire Article