ARTICLE AD BOX
வழுக்கி விழுந்த ரஜினிகாந்த்?
சமீபத்தில் ரஜினிகாந்த் தனது ஏரியாவில் டீ சர்ட்டும் அரை கால் சட்டையும் அணிந்து நடைப்பயிற்சி சென்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனதை நாம் பார்த்திருப்போம். அதனை தொடர்ந்து தற்போது ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் நடந்து செல்கிறார். திடீரென தரையில் உள்ள ஈரம் காரணமாக வழுக்கி விழுகிறார். அவர் டீ சர்ட்டும் அரை கால் சட்டையும் அணிந்திருக்கிறார். அவரது முடி நரைத்துள்ளது. அவரை பார்க்க ரஜினிகாந்தை போன்ற தோற்றம் உள்ளது. ஆனால் அந்த வீடியோவில் அவர் முகம் தெளிவாக தெரியவில்லை. எனினும் ரசிகர்கள் பலர் அவரை ரஜினிகாந்த் என்றே முடிவு செய்துவிட்டனர். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் பலரும் பதறிப்போயினர்.

உண்மை பின்னணி என்ன?
எனினும் அந்த வீடியோவில் இருப்பவர் ரஜினிகாந்த் இல்லை என தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில் அவரது முகம் தெளிவாக இல்லை. ஆனால் அவரது தோற்றம் ரஜினிகாந்த் சாயலில் தெரிந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
Please @rajinikanth Take care Ur Self Sir #Coolie pic.twitter.com/TC6pCPByLz
— Boomer Uncle 🥸🥸 (@cinemakaran007) July 29, 2025ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜின் “கூலி” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
