தோட்டத்து வீட்டை குறி வைக்கும் கும்பல்.. மீண்டும் பல்லடத்தில் பகீர் சம்பவம்!

1 month ago 42
ARTICLE AD BOX

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் பல்லடம் பெரும்பாளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது குழந்தைகள் பள்ளி செல்ல வசதியாக இருக்க வேண்டும் என புளியம்பட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டினை விட்டு வெளியேறி பல்லடம் நகர் பகுதியான வடுகம்பாளையம் பகுதியில் தனது மனைவி நந்தனா தேவி மற்றும் குழந்தை சிவானியுடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குடியேறினார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு சென்று வருவது வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை புளியம்பட்டி மில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு சென்ற கோபால கிருஷ்ணன் தோட்ட பராமரிப்பு வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் இன்று காலை வழக்கம் போல தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16 சவரன் நகை மற்றும் 7500 ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து கோபாலகிருஷ்ணன் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

உடனடியாக விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களின் தரவுகள் அடங்கிய harddisk ஐ திருடர்கள் கழட்டி சென்றுள்ளனர்.

மேலும் யாரும் இல்லாத தோட்டத்து வீட்டில் மர்ம நபர்கள் 16 சவரன் நகை மற்றும் 7500 ரொக்கம் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • paresh rawal drank urine for leg injury ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!
  • Continue Reading

    Read Entire Article